undefined

பட்டப்பகலில்  ஓட ஓட விரட்டி இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை.... சாத்தான்குளத்தில் பரபரப்பு! 

 
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியில் பட்டப்பகலில் நடந்த அரிவாள் வெட்டுக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான சுடலைமுத்து (30) தனது வீட்டருகே நின்றிருந்த போது, முன்விரோதம் காரணமாக சுந்தர் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சாதி பெயரை சொல்லி அவமதித்ததாகவும், அதனை கண்டித்ததால் மோதல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த இருவரும் சுடலைமுத்துவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென சுந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலைமுத்துவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. உயிர் காக்க ஓடிய அவரை இருவரும் விரட்டிச் சென்று தலை, கழுத்து பகுதியில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். இதைக் கண்ட உறவினர்கள் அலறியடித்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யாமல் உடலை எடுக்கக் கூடாது என உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த சுந்தர், ஜெகதீஷ் இருவரையும் போலீசார் காட்டுப்பகுதியில் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!