ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞர்... தட்டித் தூக்கிய காவல்துறை! 

 
 

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படைப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சென்ட்ரல் வந்த ரயில் பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை (33) என்பவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூ.37 ஆயிரம் கொடுத்து 5 கிலோ கஞ்சாவை வாங்கி ரயிலில் கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்மீது ஏற்கனவே 19 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. கஞ்சா யாருக்கு கடத்தப்பட்டது? கஞ்சா விற்பனை கும்பலின் தொடர்புகள் என்ன? என்பதைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!