ஆதார் அட்டையில் மாற்றங்களுக்கு கட்டுப்பாடுகள்... முக்கிய விதிமுறைகள் அமல்!
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. பலர் தங்களின் தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் செய்யும்போது இந்த விதிகளை அறியாமல் சிக்கலில் சிக்குவது வழக்கம். எனவே ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். இதனால் தேவையான மாற்றங்களை எளிதாக செய்ய முடியும்.
ஆதார் அட்டையில் பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பிறந்த தேதியை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும். ஆனால் முகவரி மாற்றத்திற்கு இவ்வாறான வரம்பு இல்லை. தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த திருத்தங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளம் வழியாகவும் செய்யலாம். மேலும் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி திருத்தம் மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் விவரங்கள் விரைவாக புதுப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!