இன்று கடைசி நாள்… ஆதார்–PAN இணைப்பு தவறினால் சிக்கல்!
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்று டிசம்பர் 31, 2025 முடிவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இன்று உடனே இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இணைப்பு செய்யவில்லை என்றால் பல நிதி பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். கட்டணம் செலுத்தி இணைத்தால் PAN எண் செயல்படும் என்றும் துறை தெரிவித்துள்ளது. ஆனால் இணைப்பு இல்லாத PAN எண் செல்லாததாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதார்–PAN இணைப்பு இல்லையெனில் வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, பெரிய தொகை பரிவர்த்தனைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவற்றில் பிரச்சனை ஏற்படலாம். TDS விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. incometaxindiaefiling.gov.in இணையதளத்தில் OTP மூலம் எளிதாக இணைக்கலாம். இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!