undefined

 ஆதார் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு!

 
 

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சார்பில் 2025–26 ஆம் ஆண்டுக்கான ஆதார் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாக இந்த வேலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 282 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பணி தொடக்க தேதி 27.12.2025 ஆகும். கடைசி தேதி 31.01.2026.

இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அல்லது 10 ஆம் வகுப்பு + 2 ஆண்டு ITI, அல்லது 10 ஆம் வகுப்பு + 3 ஆண்டு பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். UIDAI அங்கீகாரம் பெற்ற நிறுவனம் வழங்கிய Aadhaar Operator / Supervisor சான்றிதழ் கட்டாயம் வேண்டும். வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 3 இடங்கள் உள்ளன. விண்ணப்ப கட்டணம் இல்லை. நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் https://csc.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!