மரணமடைந்தவர்களின் 2.5 கோடி ஆதார் எண்கள் செயலிழப்பு… மத்திய அரசு தகவல்!
உலகிலேயே மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக ஆதார் செயல்பட்டு வருகிறது. நாட்டில் சுமார் 134 கோடி மக்கள் ஆதார் பெற்றுள்ளனர். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மரணமடைந்தவர்களின் ஆதார் எண்களை செயலிழப்பு செய்வது வழக்கமான நடவடிக்கையாகும். இதுவரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2.5 கோடி ஆதார் எண்களை செயலிழப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது அரசு நலத் திட்டங்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், அடையாள மோசடிகளை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் பாதுகாப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் தகவல்களை மறைக்கும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. க்யுஆர் கோடு மற்றும் இ-ஆதார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!