ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா...    பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு!

 

 

பஞ்சாப் மாநில அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் சிறைத்துறையை கவனித்து வந்த லால்ஜித் சிங் புல்லர், அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் சிக்கி இன்று தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸ் மாவட்ட சேமிப்புக் கிடங்கு மேலாளராகப் பணியாற்றி வந்த ககன்தீப் சிங் ரந்தாவா, சமீபத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக வெளியிட்ட உருக்கமான வீடியோவில், அமைச்சர் புல்லர் தன்னை ஒரு டெண்டர் விவகாரத்திற்காகக் கடுமையாக வற்புறுத்தி சித்ரவதை செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவியது பஞ்சாப் அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "அரசியல் அழுத்தத்தால் ஒரு நேர்மையான அதிகாரியை இழப்பதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" எனக் கூறி, முறையான விசாரணை நடத்தத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய, அமைச்சர் புல்லரை உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அமைச்சர் புல்லர், தன் மீதான புகார்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், அமைச்சரின் ராஜினாமா மட்டும் போதாது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. "அமைச்சர் புல்லர் அந்த அதிகாரியிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார்; எனவே அவர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்" என பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் "ஊழலற்ற ஆட்சி" என்ற முழக்கத்திற்கு இந்தச் சம்பவம் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. நேர்மையான அதிகாரியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அமிர்தசரஸ் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!