பயங்கரம்: லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய இன்னோவா கார் ...  கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் 3 பேர் படுகாயம்!

 

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக, கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த இன்னோவா கார் கோர விபத்துக்குள்ளானது. சாலையில் மழைநீர் தேங்கி வழுக்கியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர மோதலில் கார் அப்பளம் போல் நொறுங்கி, அருகில் இருந்த வயல்வெளியில் தலைகீழாகக் கவிழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்தின் போது கார் அதிவேகமாக வந்ததே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றினால் சாலையைச் சரியாகக் கணிக்க முடியாததும் விபத்துக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்தப் பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் மழைக்காலங்களில் மெதுவாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!