undefined

  14 வயது ஆராத்யாவுக்கு தனி செல்போன் கிடையாது... மகளுக்காக  ஐஸ்வர்யா எடுத்த உறுதியான முடிவு! 

 

பாலிவுட் நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் காதலித்து 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2011ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் பிறந்தார். சிறு வயதிலிருந்தே பெற்றோருடன் பொது நிகழ்ச்சிகளில் தோன்றிய ஆராத்யா, கேமரா ஃப்ளாஷ்களை பார்த்து வித்தியாசமாக நடந்து கொள்வதாக ஊடகங்களில் அடிக்கடி பேசப்பட்டது.

தற்போது 14 வயதாகியுள்ள ஆராத்யா, அம்பானி நடத்தும் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். பள்ளி நாடகங்களில் பங்கேற்று நடிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பதை அவர் நிரூபித்துள்ளதாக கூறப்படுகிறது. தாய்-தந்தையைப் போலவே தன்னம்பிக்கையுடன் பேசும் பழக்கம் ஆராத்யாவுக்கு இருப்பதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில், மகள் வளர்ப்பு குறித்து அபிஷேக் மனம் திறந்தார். ஆராத்யாவுக்கு இதுவரை தனியாக செல்போன் கொடுக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் அவர் இல்லை என்றும் கூறினார். இணையத்தை பாடப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகளை அவர் படிப்பதில்லை என்றும் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!