மகா சிவராத்திரியன்று உங்கள் ராசிப்படி செய்ய வேண்டிய அபிஷேகமும், அதன் பலன்களும்!
சிவராத்திரி அன்று 12 ராசிக்காரர்களும் தங்களுக்கு உரிய சிறப்புப் பொருட்களைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, கிரக தோஷங்களை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும்.
மேஷம் - கன்னி - விருச்சிகம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தம் அல்லது தேன் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு. இதனால் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் கைகூடும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி உண்டாகும்.
ரிஷபம் - துலாம் - கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்கள் பசும்பால் அல்லது தயிர் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் செய்வதால் குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பணவரவு அதிகரித்துச் செல்வம் பெருகும்.
மிதுனம் - மகரம் ஆகிய 2 ராசிக்காரர்கள் கரும்புச் சாறு அல்லது இளநீர் கொண்டு அபிஷேகம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதே போன்று கடகம் - மீனம் ஆகிய இரண்டு ராசிக்காரர்கள் நெய் அல்லது சந்தனம் கொண்டு சிவனை வழிபட வேண்டும். இதன் மூலமாக மன அமைதி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
சிம்மம் - தனுசு ஆகிய 2 ராசிக்காரர்கள் வில்வ இலை கலந்த தீர்த்தம் அல்லது மஞ்சள் பொடி கொண்டு அபிஷேகம் செய்வது உத்தமம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் தேடி வரும்.
வீட்டில் சிவராத்திரி பூஜை செய்வது எப்படி?
கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவலிங்கம் அல்லது சிவனின் திருவுருவப் படத்திற்கு முன் அமர்ந்து இந்தப் பூஜையைச் செய்யலாம். பூஜை அறையில் ஐந்து முகக் குத்துவிளக்கு அல்லது இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைக்கவும். மாலை 6 மணி முதல் அதிகாலை வரை "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை 108 முறை அல்லது அதற்கு மேல் உச்சரிக்கவும்.
சிவனுக்குப் பிடித்தமான சாதம், வடை அல்லது பாயசம் ஆகியவற்றைப் படைக்கலாம். வசதி இல்லாதவர்கள் வெறும் பழங்களை மட்டும் படைத்து வழிபடலாம். முடிந்தால் 108 வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்யவும். இது அனைத்து பாவங்களையும் போக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!