undefined

டிராக்டர் மீது பைக் மோதி விபத்து.. வாலிபர் பலி !

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அயனடைப்பு ஏ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ஆனந்த கண்ணன் (36). இவர் ஆறுமுகமங்கலம் கோவிலுக்கு பைக்கில் சென்று காெண்டிருந்தார். சாயர்புரம் சாலை சந்திப்பு பெரும்படை சாஸ்தா கோவிலுக்கு அருகே செல்லும்போது, சாலையோரத்தில் கம்புகள் ஏற்றியவாறு நிறுத்தியிருந்த டிராக்டரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?