வளைகாப்பு விசேஷத்தில் லாரியை முந்த முயன்றபோது கவிழ்ந்த வேன்... 6 பேர் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பயங்கர விபத்து அரங்கேறியுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் 15 பேருடன் சென்ற டிராவல்ஸ் வேன் ஒன்று, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராத விதமாக லாரியின் மீது லேசாக உரசியது. இதில் நிலைதடுமாறிய வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்ததும் வேனுக்குள் இருந்தவர்கள் அலறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மீட்புக்குழுவினரும், வேனுக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பலத்த காயமடைந்த 6 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையின் நடுவே கவிழ்ந்த வேனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மகிழ்ச்சியாக வளைகாப்பு விசேஷத்திற்குச் சென்ற இடத்தில், இப்படி ஒரு கோர விபத்து நடந்து உறவினர்கள் காயமடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!