அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து... திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது!
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, இன்று பணியில் சேர்வதற்காக நேற்று காலை முதலே சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் சென்னை நோக்கி திரும்ப தொடங்கினர். தென் மாவட்டங்களில் இருந்து வழக்கத்தை விடப் பல மடங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நேற்று மாலை உளுந்தூர்ப்பேட்டை புறவழிச்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை புறவழிச்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அப்படியே அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது.
சொந்த ஊர்களில் இருந்து பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள், நீண்ட நேரம் வெயிலிலும் நெரிசலிலும் சிக்கித் தவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போக்குவரத்துப் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் படையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாகப் போக்குவரத்து மெல்ல மெல்லச் சீரானது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!