கொடூரம்... தாத்தாவை ஆசிட் ஊற்றிக் கொலை செய்த  பேரன் ! 

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் 84 வயது முதியவர் சாரங்கபாணி என்பவர் தனது பேரன் சௌந்தர் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சௌந்தர், நேற்று காலை வீட்டில் இருந்த தனது பாட்டியின் புகைப்படத்தை எடுத்து எரித்துள்ளார். இதனைப் பார்த்த தாத்தா சாரங்கபாணி, பேரனைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர், சற்றும் எதிர்பாராத விதமாகத் தனது தாத்தா மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் அலறியபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாத்தாவின் அந்தரங்க உறுப்புகளை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரணமல்லூர் காவல்துறையினர், முதியவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பேரன் சௌந்தரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் முதியவர் ஒருவரைப் பேரன் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த செய்தி அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!