பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற ஓட்டுனர் பணியிடை நீக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அழகு நாச்சியம்மன் கோயிலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மூடப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்று விட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர்.
அதனை பேருந்தில் பயணம் செய்த பயணி வீடியோ எடுக்கும் பொழுது வீடியோ எடுத்து என்ன செய்யப் போகிறாய்? போய் மேனேஜரிடம் கேளுங்கள் என்று தெனாவட்டாக கூறியதோடு சுமார் 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பொன்.புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த பேருந்தின் நடத்துனர் ஆண்டிச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!