undefined

போலீசாரின் கையைக் கடித்த தவெக தொண்டர் 'ஜெமினி' கைது!

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மதுபான பாரை அகற்றக் கோரித் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தலைமைக் காவலர் ஒருவரின் கையைப் பிடித்து வெறியுடன் கடித்த த.வெ.க. தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பார் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தின்போது, த.வெ.க.வினர் திடீரெனத் தடுப்புகளை மீறி அந்தப் பாரை முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் த.வெ.க.வினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் அருள் என்பவரின் கையைப் பிடித்து ஒன்றிரண்டு முறை கடுமையாகக் கடித்தார். காவலரின் கையைத் த.வெ.க. தொண்டர் கடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, காவலரின் கையைக் கடித்த த.வெ.க. தொண்டர் ஜெமினியை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட த.வெ.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டு, 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் போராட்டத்தைக் கைவிடாததால், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து போலீசார் பின்னர் விடுவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!