undefined

கேம்பா கோலா விளம்பரத்தில் நடிகர் அஜித்... ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மெகா டீல்!

 

சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர் அஜித் குமார், தற்போது தனது சொந்த கார் ரேஸிங் அணி (Ajith Kumar Racing) தொடர்பான விளம்பரத்தில் நடித்துள்ளது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஆரம்பகாலத்தில் நடிகை சிம்ரனுடன் இணைந்து 'நெஸ்கஃபே' காபி விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். அது மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு சூர்யா-ஜோதிகா ஜோடி அந்த விளம்பரத்தைக் கையில் எடுத்தது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 'கேம்பா' (Campa) குளிர்பான நிறுவனம், அஜித்தின் ரேஸிங் குழுவிற்கு அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கேம்பா குளிர்பானத்தை கையில் ஏந்தியபடி அஜித் இருக்கும் புகைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது திரைப்பட விளம்பரங்களிலோ பங்கேற்பதில்லை. ஆனால், ஐரோப்பாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் போன்ற கார் பந்தயங்களில் தனது அணியைச் சர்வதேச அளவில் கொண்டு செல்லப் பெருமளவிலான நிதி தேவைப்படுகிறது. இதற்காகவே அவர் வர்த்தக ரீதியான இந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!