undefined

"என் ரசிகர்களை நிச்சயமாக பெருமைப்பட வைப்பேன்” - நடிகர் அஜித்குமார் பேட்டி!

 

”என் ரசிகர்களை நிச்சயம் பெருமைப்பட வைப்பேன்” என்று நடிகர் அஜித் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது துபாயில் நடைபெற்று வரும் '24 ஹெச் சீரிஸ்' (24H Series) மத்திய கிழக்கு டிராபி கார் பந்தயத்தில் தனது சொந்த அணியுடன் பங்கேற்று வரும் நடிகர் அஜித், இந்தப் போட்டியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பேசியிருக்கிறார். 

முன்னதாகப் பயிற்சி மற்றும் தகுதிச் சுற்றுகளின் போதும் அஜித் அணியின் கார்கள் சில விபத்துகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. விபத்து காரணமாகப் பந்தயத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், தன்னை நேரில் காணத் திரண்ட ரசிகர்களுக்காக அஜித் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையோ அல்லது எங்கள் அணி பரிசு வெல்வதையோ பார்க்க முடியாமல் போனது எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன், நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும்."

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!