8 ஆண்டு வழக்கு முடிவுக்கு வந்தது … நடிகர் திலீப் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பு!
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற நடிகையை ஒரு கும்பல் கடத்தி, ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள திரையுலகை உலுக்கிய நிலையில், காவல்துறை விசாரணையில் நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த குற்றம் நடைபெற்றதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் உட்பட பலர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தீர்ப்பளித்தார். வழக்கில் ஏ1 முதல் ஏ6 வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் திலீப், “எனக்கு உறுதுணையாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி. என் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை பெரிதும் பாதித்தது. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என தெரிவித்தார். இந்த தீர்ப்பால் கேரள திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு எதிர்வினைகள் வெளிப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!