நடிகர் திலீப் சங்கர் மரணத்தில் திருப்பம்... அறையில் சிதறிக்கிடந்த காலி மதுபாட்டில்கள்... கல்லீரல் நோய்க்கான மருந்துகள்!
நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டது மலையாள திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த நிலையில், அவரது அறையில் 'கல்லீரல் நோய்க்கான மருந்துகளும், இரண்டு காலி மது பாட்டில்களும் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
பிரபல மலையாள சின்னத்திரை நடிகர் திலீப் சங்கரின் மரணம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னத்திரையில் அதிகளவில் நட்புவட்டத்தைக் கொண்டிருந்த நடிகர் திலீப் சங்கர் ஒரு சீரியல் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றிருந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் வான்ரோஸ் சந்திப்பில் உள்ள அரோமா எனும் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த நடிகர் திலீப் சங்கர், தனது அறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 19ம் தேதி திலீப் சங்கர் ஓட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து படப்பிடிப்புகளில் கலந்துக் கொண்ட திலீப் சங்கர், கடந்த 27ம் தேதி படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார். அவரை மீண்டும் ஹோட்டலில் இறக்கி விட்டதாக படக்குழுவினரும் போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக, திலீப் யாருடைய தொலைபேசி அழைப்பையும் கவனிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று தயாரிப்பு நிர்வாகி நடிகர் திலீப் சங்கரை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு சென்றிருந்த போது அறைக்கதவு உள் பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஹோட்டல் ஊழியர்கள் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது நடிகர் திலீப் சங்கர் தனது படுக்கையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் சோதனையில் திலீப் சங்கர் அறையில் மேஜை மீது கல்லீரல் நோய்க்கான மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. இரண்டு காலி மது பாட்டில்களும் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
படக்குழுவினரின் கூற்றுப்படி, நடிகர் திலீப் உடல்நலக்குறைவு காரணமாக தனது ஷெட்யூலை 27ம் தேதி முன்கூட்டியே முடித்துவிட்டு அறைக்கு திரும்பியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் குழுவினர் அறையை சோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!