"விஜய் நடிக்கலைன்னா சினிமா ஒண்ணும் அழிஞ்சிடாது” - நடிகர் கருணாஸ் கருத்து!
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "சினிமா ஒன்றும் அழிந்துவிடாது" என நடிகர் கருணாஸ் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், இந்தப் படத்திற்குப் பிறகு இனி நடிக்கப் போவதில்லை என்றும், மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் உற்சாகமாகவும், மறுபுறம் இனி திரையில் அவரைக் காண முடியாது என்ற கவலையிலும் உள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கருணாஸிடம், விஜய் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் சினிமாவை விட்டு விலகுவது திரைத்துறையைப் பாதிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
"சினிமா ஒன்றும் அழிந்து விடாது. என்னை போன்ற பலரை வளர்த்து விட்டது இந்த சினிமா தான். அது அப்படியேதான் இருக்கும். சினிமா யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது." இதன் மூலம், ஒரு பெரிய நடிகர் விலகுவதால் திரையுலகின் வளர்ச்சி நின்றுவிடாது என்பதையும், கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய கலைஞர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என்பதையும் கருணாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!