undefined

 நடிகர் ரஜினிகாந்த் வேதா இல்லத்திற்கு நேரில் சென்று ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை !   

 


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  வேதா நிலையத்தில் உள்ள அவரது படத்துக்கு ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று.

மறைந்து விட்டாலும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக அவரை நிற்கவைக்கிறது. அதிமுக தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவரால் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.

அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். வாசலிலே வந்து ரஜினியை வீட்டிற்குள் அழைத்து சென்ற ஜெ.தீபா, ஜெயலலிதா புகைப்படத்திற்கு குத்து விளக்கேற்றி ரஜினி மரியாதை செலுத்தினார். பின்னர்  செய்தியாளர்களிடம் ” ஜெயலலிதாவின் நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும். இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துளேன்” என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?