undefined

இன்று நடிகர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!!

 

ரசிகர்களால் இளைய தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்  மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளைசெய்து வருகிறார். உலக பட்டினி தினத்தில் 234  தொகுதிகளிலும் உணவு வழங்க உத்தரவிட்டார். அதே போல் கடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல்   3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு  பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.

 

இந்நிகழ்வு பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அவரின் அரசியல் எண்ட்ரிக்கான ஆரம்ப கட்ட நகர்வுகள் என்கின்றனர். இந்நிலையில்   தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 


அந்த வகையில் நடிகர் விஜய் இன்று பனையூர் இல்லத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.   இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் குறித்த முக்கிய முடிவுகள் , நிறை குறைகள் ஆராயப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்