நடிகர் விஜய்க்கு அபராதம்!! போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி!!
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்க உத்தரவிட்டார். அதே போல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். தற்போது 234 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சினைகள் என்னென்ன.? எனவும், மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட வாரியாக கேட்டறிந்தார். நிர்வாகிகளின் நலனை விசாரித்ததுடன் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டார்.இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக நடிகர் விஜய்யிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. . சிக்னலை மதிக்காமல் விஜய்யின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!