undefined

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் விஜய் சந்திப்பு...  3 பக்க கோரிக்கை மனு!

 


தான் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக நடிகர் விஜய், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை விஜய் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் என்று இன்று காலை தனது கைப்பட கடிதம் எழுதியிருந்தநிலையில் தற்போது கவர்னர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.

விஜய் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்திருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!