undefined

நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய கும்பல் - வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை!

 

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால், ஐதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்ற சினிமா விளம்பர நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போதே இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விழாவில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி நடைபெற்ற வணிக வளாகத்தில் (லுலு மால்) நிதி அகர்வாலைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்ததால், அங்கிருந்த பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதனால் விழா மேடையிலேயே பெரும் பதற்றம் நிலவியது. ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் தனது காரை நோக்கிச் செல்ல முயன்றபோது, பாதுகாப்பு வளையத்தையும் மீறிச் சில மர்ம நபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்ட சிலர், நிதி அகர்வாலிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய அவரை, பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு மீட்டு காரில் அமரவைத்தனர். காரில் ஏறியதும் மிகுந்த மன உளைச்சலுடன் தனது உடைகளைச் சரிசெய்துகொண்ட நிதி அகர்வால், ரசிகர்களின் அநாகரிகமான செயலால் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் தனது முகபாவனையில் வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, திரையுலகினரிடையே கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள ஐதராபாத் போலீசார், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதற்காக அந்த வணிக வளாகத்தின் மேலாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண் கலைஞர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் நிலவும் மெத்தனப் போக்கை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!