கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கமுடன் நடிகை சமந்தா சந்திப்பு... வைரலாகும் வீடியோ!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரும், யுனிசெப் (UNICEF) அமைப்பின் நல்லெண்ணத் தூதருமான டேவிட் பெக்கம் தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில், நடிகை சமந்தாவுடன் அவர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியின் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாகப் படங்களில் நடிப்பதைச் சற்றுக் குறைத்துக் கொண்டிருந்தார். எனினும், அவர் மீண்டும் தற்போது முழுவீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், சமந்தாவுக்குச் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
யுனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் டேவிட் பெக்கம், தனது இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக, பொது நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். அவர் இந்தியா வந்திருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சமந்தா ஆகியோரைச் சந்தித்த நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் அதிகக் கவனம் பெற்றன.
சமந்தா மற்றும் டேவிட் பெக்கம் இருவரும் மும்பையில் மெட்டா ஏஐ (Meta AI) நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, சமந்தாவுடன் டேவிட் பெக்கம் பல்வேறு விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடல் நடத்தினார். இந்தக் கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன.
விளையாட்டுத் துறையில் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு சர்வதேசப் பிரபலம், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையுடன் இணைந்து உரையாடியது, இந்தியச் சினிமா மற்றும் சமூக நிகழ்வுகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!