நடிகை சமந்தா – ராஜ் நிதிமோர் ஈஷா யோக மையத்தில் ரகசிய திருமணம்?
தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோரை காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்ட நிலையில் இன்று காலை கோவையில் திருமணம் நடைபெற்றதாக பேசப்படுகிறது. சமந்தா தரப்பில் இதற்கென வெளிப்படையான மறுப்பு வராததால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருந்தது. தற்போது கோவை ஈஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இருவரும் இன்று (டிச.1) காலை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
2017-ல் நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து கொண்டு 2021-ல் விவாகரத்து பெற்ற சமந்தா, தி பேமிலி மேன் 2-ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தது அனைவருக்கும் நினைவிருக்கிறது. அந்த தொடருக்கு இயக்குநராக இருந்த ராஜ் நிதிமோரும் கிருஷ்ணா தசரகோதபள்ளியுடன் இணைந்து பாலிவுட்டில் பல படைப்புகளை உருவாக்கியவர்கள். தி பேமிலி மேன் முதல் இரண்டு பாகங்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான மூன்றாவது பாகமும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
இதற்கிடையில் நாக சைதன்யா கடந்தாண்டு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது சமந்தா – ராஜ் நிதிமோர் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை அனைவரும் காத்திருக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!