undefined

"மாலத்தீவு" ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சம்யுக்தா!

 

கடந்த டிசம்பர் மாதம் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதியினர், தற்போது தங்களது தேனிலவு பயணத்தை மாலத்தீவின் கடற்கரையில் கொண்டாடி வருகின்றனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தா பகிர்ந்துள்ள புகைப்படங்களில்: கடற்கரை ஓரம் அனிருதாவுடன் கைகோர்த்து நடப்பது போன்றும், கடல் அழகை ரசிப்பது போன்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். "மகிழ்ச்சியான தருணங்கள்" (Happy Moments) என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர். மாடலிங் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன். இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே (CSK) அணிக்காக விளையாடியவர் மற்றும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த இவர்கள், பெரியோர்களின் சம்மதத்துடன் காதலைத் திருமண பந்தமாக மாற்றிக்கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட கியூட்டான புகைப்படங்களும் அப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் மட்டுமின்றி, கடற்கரையில் அனிருதாவுடன் இணைந்து செய்யும் குட்டி குட்டி ரீல்ஸ் வீடியோக்களையும் சம்யுக்தா தனது ஸ்டோரியில் பகிர்ந்து வருகிறார். மாலத்தீவின் நீல நிறக் கடலும், இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறை என இருவேறு துறைகளைச் சேர்ந்த இவர்கள் இணைந்துள்ளது ஒரு 'பர்பெக்ட் மேட்ச்' என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!