நடிகை ஸ்ரேயா திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்!
2003ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர் நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இடைவெளி எடுத்திருந்த ஸ்ரேயா, தற்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றிவருகிறார். குடும்பத்துக்கான நேரத்தையும் ஆன்மீக பயணங்களையும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவ்வப்போது அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா தனது தாய் நீரஜா சரண் மற்றும் மகள் ராதாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குடும்பத்துடன் அமைதியான முகத்துடன் காணப்பட்ட ஸ்ரேயா ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!