பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கவுரி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நந்தினி பெங்களூருவில் உயிரிழந்தார். கர்நாடகாவை சேர்ந்த அவர் கன்னட சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதாகவும், அதற்கு தாம் தயாராக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் மன ரீதியான பாதிப்புகள் இருந்ததாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் நடிகை நந்தினி உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை உலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!