undefined

நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தை கொடூரக் கொலை! 

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை நடிகை விஷ்ணுப் பிரியாவின் தந்தை  நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  ஹைதராபாத்தில் மிகப்பெரிய தொழிலதிபரும் கூட.  இந்நிலையில்  தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானலில்   மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அந்த விடுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ நேரத்தில் உரிமையாளர் மற்றும் இரு கேர் டேக்கர்கள் மட்டும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கேர் டேக்கர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிவைத்து, உரிமையாளரை கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றதாக போலீஸ் கூறுகிறது. கட்டப்பட்டிருந்த கேர் டேக்கர் ஒருவர் தப்பித்து வெளியே சென்று தகவல் அளித்தார். போலீசார் விரைந்து சென்றபோது குற்றவாளிகள் ஏற்கனவே தப்பியிருந்தனர். சிசிடிவி சாதனங்கள், செல்போன் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட கண்காணிப்பாளர் பிரதிப் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!