திரையுலகில் சோகம்... கார் விபத்தில் இளம் நடிகை ‘ஹர்ஷில் காலியா’ பலி... ரசிகர்கள் அதிர்ச்சி!
ராஜஸ்தானி திரையுலகின் வளர்ந்து வரும் நட்சத்திரமும், பிரபல மாடலுமான ஹர்ஷில் காலியா (30), ஜெய்ப்பூரில் நடந்த கோர சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தானி இசை ஆல்பங்கள் மற்றும் 'கிரைம் நெக்ஸ்ட் டோர்' போன்ற புகழ்பெற்ற வெப் சிரீஸ்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் ஹர்ஷில். மாடலிங் துறையிலும் தடம் பதித்த இவருக்கு, அடுத்தடுத்துப் பெரிய திரையில் வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், இந்த விபத்து அவரது கனவுகளைச் சிதைத்துள்ளது. இளம் நடிகையின் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் ஹர்ஷிலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு திறமையான கலைஞரை இழந்த வேதனையில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!