பரபரப்பு... அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மேடையிலேயே மயங்கி விழுந்த முன்னாள் எம்.எல்.ஏ!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு, ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மத்திய மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. பென்ஜமின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பி. வி. ரமணா, மாதவரம் வி. மூர்த்தி, மற்றும் வி. அலெக்ஸாண்டர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது கடும் வெயில் நிலவியது. இதில் பங்கேற்று மேடையில் நின்றிருந்த வடக்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பலராமன், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் மேடையிலும் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த நிர்வாகிகள் அவரைத் தாங்கிப் பிடித்து பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் ஆசுவாசப்படுத்தப்பட்டு, உடனடியாக காரில் அருகே இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!