"10, 12 முடிச்சவங்களுக்கு  25 லட்சம் லோன்  !" தமிழர்களுக்கே 75% வேலை... அதிமுக-வின் மெகா 'மாஸ்டர் பிளான்'!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சிக்குச் சவால் விடும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 24) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கத் துடிக்கும் இளைஞர்களுக்காகப் பலே திட்டத்தை அறிவித்துள்ளது அதிமுக.

இந்தத் திட்டத்தின்படி, தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான திறன்சார் பயிற்சிகள்  வழங்கப்படுவதோடு, எந்தவிதமான பிணையும் (Security) இன்றி ரூ.25 லட்சம் வரை தொழில் கடன் வழங்க வழிவகை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. "இனி வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக நம் இளைஞர்கள் மாற வேண்டும்" என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், "மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை" என்ற முழக்கத்துடன், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்புகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது. வெளிமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இந்த '75% இடஒதுக்கீடு' அறிவிப்பு, தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!