அடோப் நிறுவன சிஇஓ ராஜினாமா!

 

அமெரிக்காவில் செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலமாக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார் என்றும் பின்னர் வாரியத் தலைவராக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு இறுதியில் தலைமைப் பொறுப்பை ஏற்ற சாந்தனு நாராயண் கடந்த 18 ஆண்டுகளாக நிறுவனத்தை முன்னேற்றி வந்தார். மென்பொருள் விற்பனை நிறுவனமாக இருந்த அமைப்பை கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக மாற்றியதில் அவரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அவரது காலத்தில் நிறுவன வருவாயும் ஊழியர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வடிவமைப்பு துறையில் கடும் போட்டி உருவாகியுள்ளது. இதன் தாக்கம் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சாந்தனு நாராயண் விலகல் அறிவிப்புக்குப் பிறகு நிறுவன பங்கு விலையும் சரிவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!