undefined

20 கோடிக்கும் அதிகமான திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய்... சி.பி.ஐ. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பிரசாதமான லட்டு தயாரிப்புக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் பெரிய அளவில் கலப்படம் நடந்திருப்பது, சி.பி.ஐ. தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 20 கோடிக்கும் அதிகமான லட்டுகளில், ரசாயனங்கள் கலந்த மற்றும் செயற்கையான நெய் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

2019 ஜூன் முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 48.76 கோடி லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 20.14 கோடிக்கும் அதிகமான லட்டுகளில் (சுமார் 42%) கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. கொள்முதல் விவரம்: ஐந்து ஆண்டுகளில், தேவஸ்தானம் ரூ.534.7 கோடி செலவில் 1.61 கோடி கிலோ நெய்யைக் கொள்முதல் செய்துள்ளது.

ஆய்வக சோதனைகள் மற்றும் விநியோகஸ்தர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்தக் கொள்முதலில் 68 லட்சம் கிலோ நெய், அதாவது கிட்டத்தட்ட ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகள், கலப்படம் செய்யப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது. விசாரணையில் பயன்படுத்தப்பட்ட நெய், பால் அல்லது வெண்ணெயில் இருந்து பெறப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பாமாயில் மற்றும் பாம்கர்னல் ஆயில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை பீட்டா கரோட்டின் கொண்டு தடிமனாக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. செயற்கை சுவைகள் மற்றும் மோனோ, டிகிளிசரைடுகள், லாக்டிக் அமில எஸ்டர், அசெட்டிக் அமில எஸ்டர் போன்ற குழம்பாக்கிகள் (Emulsifiers) சேர்க்கப்பட்டு, நெய்யின் இயல்பான அமைப்பை ஒத்திருக்குமாறு தயாரிக்கப்பட்டு, தரமாக்கி உள்ளனர்.

கலப்பட நெய்யை வழங்கிய நிறுவனங்களாக உத்தரகாண்டின் போலே பாபா டைரி மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள ஏ.ஆர். டைரி, ஆந்திரப் பிரதேசத்தின் வைஷ்ணவி டைரி, உத்தர பிரதேசத்தின் மால் கங்கா டைரி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. 

திருப்பதி கோவில் சமையல் அறையில் (போட்டு) தினமும் சுமார் 3½ லட்சம் லட்டுகளுக்காக 11,500 முதல் 13,000 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. கலப்பட நெய்யானது தூய நெய்யுடன் பொதுவான இருப்புடன் கலக்கப்பட்டதால், இந்த காலகட்டத்தில் திருமலைக்கு வருகை தந்த 10.97 கோடி பக்தர்களில் யார் தூய பிரசாதத்தைப் பெற்றனர், யார் கலப்பட பிரசாதத்தைப் பெற்றனர் என்பதைக் கண்டறிவது இப்போது சாத்தியமற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு இந்த புள்ளி விவரங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!