14 வருடங்களுக்கு பிறகு மீ...ண்டும் இணையத்தை தெறிக்க விட்ட   தளபதி,  த்ரிஷா ஜோடி!!

 

நடிகர் விஜய் - த்ரிஷா இருவரும் சமீபத்தில் விமானத்தில் பணிப்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 14 வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருந்து லியோ படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.லியோ படத்தின் படப்பிடிப்பு  காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில்  விமானத்தில் பணிப்பெண்ணுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் இளையதளபதி நடிகர் விஜய் தளபதி 67 என பெயரிடப்படாத  படத்தில்  நடித்து வருகிறார்.  நடிகர் விஜய்யின் 67 வது படமாக  பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில் தயாராகி வரும் இந்த தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.  7 ஸ்க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கான இசை  அனிருத். 


தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி முதல் 3 தேதிகளில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி  நேற்று படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த திரைப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் என நட்சத்திரப்பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?