undefined

17 வருடங்களுக்குப் பின் மீண்டும் சென்னையில் வரப்போகுது டபுள் டக்கர் பஸ்.. குஷியில் மாணவர்கள்!

 

அது ஆச்சு 17 வருஷம். ஒரு காலத்தில் திரைப்படங்களில் பெங்களூரு பூங்காக்களைச் சுற்றிக் காட்டுவது போல ஹீரோயினை சுற்றி வந்து ஹீரோ பாட்டு பாடுவதும், வில்லனைத் துரத்தி ஹீரோ அடிப்பதையும் டபுள் டக்கர் பஸ்ஸில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் வாயைப் பிளந்தபடி டபுள் டக்கர் பேருந்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 17 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை சென்னையில் மீண்டும் இயக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளதாக மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 20 புதிய மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் வாங்கப்பட்டு, இரண்டு மாதத்துக்குள் சென்னை நகர சாலைகளில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் பகுதியாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. கடந்த 2023 முதல் டபுள் டக்கர் மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது புதிய மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, தாம்பரம் - பிராட்வே இடையே இயக்கப்பட்ட டபுள் டக்கர் சேவை 2008ம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தனியார் நிறுவனம் சார்பில் சோதனை பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முழுமையாக இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!