undefined

அடப்பாவிங்களா... பிரிட்ஜ் மேலிருந்து நண்பனை தள்ளிவிட்டு ரீல்ஸ் வீடியோ!

 

அடப்பாவிங்களா... ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் புகழடைய இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள் என்று கமெண்ட்ஸ்கள் ஏகத்துக்கும் பறக்கின்றன. சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இணையத்தில் பரவும் அந்த வீடியோவில், உயரமான பாலத்தின் கைப்பிடி சுவரில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞரை, அவரது நண்பன் திடீரென ஆற்றில் தள்ளிவிடும் காட்சி காணப்படுகிறது. இந்த காட்சி பலரையும் பதற வைத்துள்ளது.

இத்தகைய ஆபத்தான செயல்கள் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக மாறுவதாக நெட்டிசன்கள் கவலை தெரிவிக்கின்றனர். வைரலுக்காக உயிரையே பணயமாக வைப்பது ஆபத்தானது என்றும், இது சட்டப்படி குற்றம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!