மேற்கு வங்கத் தேர்தலில் முதல்முறையாக ஏஐ கேமராக்கள் - தேர்தல் ஆணையம் அதிரடி!
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாகவே அங்கு தேர்தல் காலங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழும் என்பதால், இந்த முறை அவற்றைக் கட்டுப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடிப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விதிகளை மீறும் வகையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், எவ்வித சமரசமுமின்றி உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்தத் தேர்தலின் சிறப்பம்சமாக, வரலாற்றிலேயே முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியுடன் கூடிய சிசிடிவி (CCTV) கேமராக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் வாக்குச்சாவடி நிகழ்வுகள் அனைத்தும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாகக் கண்காணிக்கப்படும். ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் கேமராக்கள் அணைக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமான வகையில் கும்பல் நடமாட்டம், கள்ள ஓட்டுப் பதிவு போன்ற நடவடிக்கைகள் ஏஐ தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்டாலோ, அந்தத் தொகுதியின் வாக்குப்பதிவு செல்லாததாக அறிவிக்கப்பட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிடப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு இது குறித்துத் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தேர்தல் நடைமுறைகளில் எவ்விதமான வெளிப்படைத்தன்மையற்ற சூழல் நிலவினாலும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்குப் பெயர் போன மேற்கு வங்கத் தேர்தல் களத்தில், இந்த ஏஐ தொழில்நுட்பக் கண்காணிப்பு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், வாக்காளர்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க இது உதவும் என்றும் தேர்தல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!