undefined

ஏஐ உச்சி மாநாட்டில்  அரை நிர்வாண போராட்டம்... பெரும் பரபரப்பு!

 

டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் நடைபெற்று வரும் ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநாட்டு கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்த அவர்கள் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் படங்களுடன் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சட்டைகளை கழற்றி அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.

இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. பரபரப்பை தொடர்ந்து 10 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அரங்கிற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இது முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கை என குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே போராட்டம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!