அதிமுக–பாஜக தொகுதி பங்கீடு… இபிஎஸ் வீட்டில் பரபரப்பு சந்திப்பு!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜகவுக்கு 56 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை ஏற்று செயல்படுவது குறித்து இபிஎஸ் தரப்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவுக்கு இவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படுமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி அவசியம் என்பதால், இந்த கோரிக்கையை கவனமாக பரிசீலித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு, 2026 தேர்தல் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!