undefined

   கனிம கடத்தல்: அதிமுக கவுன்சிலர் கைது, 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

 

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட களியலை சுற்றியுள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக பாறைகள் உடைத்து கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில், அதிமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சில காலம் குவாரிகள் மூடப்பட்டன.

பின்னர் கட்டச்சல் பகுதியில் உள்ள ஒரு குவாரி மீண்டும் செயல்படத் தொடங்கியது. பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில், வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களை ஜல்லி, எம்.சான்டாக மாற்றி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்பட்டு, முறையான பாஸ் இன்றி கனிமங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் குவாரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்பார்வையாளராக இருந்த ஸ்டாலின் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடையாலுமூடு பேரூராட்சியின் 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நடவடிக்கைகள் எடுத்த பின்னரும் கனிம கடத்தல் தொடர்வதாக மக்கள் குற்றம்சாட்டுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!