டிசம்பர் 28ல் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரப்பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
வருகிற 28-ந்தேதி சென்னையை அடுத்த திருப்போரூரில் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன் பேச உள்ளார். “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரத் தலைப்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம், திருப்போரூர் ரவுண்டானா அருகே பிரமாண்ட மேடையில் நடக்கவுள்ளது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முனைந்துள்ள நிலையில், இது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!