undefined

  அதிமுக நிர்வாகி கத்தியால் சராமாரியாக  வெட்டிக் கொலை... பயங்கரம்! 

 

மதுரை அருகே சாமநத்தம் கிராமத்தில் அதிமுக இளைஞர் சங்க நிர்வாகி சக்தி மகன் செந்தில்குமார் (36) இன்று காலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கிராமத்தில் அரசுப் பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தவர். காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து டீக்கடைக்கு சென்றபோது, நால்வர் மர்மநபர்கள் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி, அவரது உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆரம்ப விசாரணையில், சில இளைஞர்கள் இரவு நேரத்தில் டீக்கடையில் மது அருந்தி அமர்வதாகவும், செந்தில்குமார் இதனை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறு கொலையில் தொடர்புடையதாக இருக்கலாம் என போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

செந்தில்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த கொலையானது மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவத்தை கவனித்துக் கொண்டு போலீசாரின் விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!