undefined

அதிமுக பொதுக்குழு...  தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம்! 

 
 

அதிமுகவின் முக்கிய பொதுக்குழு கூட்டம் நாளை வேல்ஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு, அடுத்தகட்ட உத்தி, கூட்டணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட உள்ளன. ஆனால், கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் உடல்நலக் குறைவால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தை ஒத்திவைக்காமல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் கட்சி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளில் கடுமையான நிலைப்பாடு கொண்டவராக கே.பி. முனுசாமி அறியப்படுகிறார். தமிழ்மகன் உசைன் இல்லாத நிலையில் கூட்டத்தை ஒழுங்காக நடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!