undefined

பிரியாணி முதல் பருப்பு பாயாசம் வரை... அதிமுக பொதுக்குழு உணவு விருந்து! 

 
 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இதில் திமுக அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள், கூட்டணி முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அரசியல் விவாதங்களோடு சேர்ந்து, ஏற்பாடுகளும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, கூட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. காலை முதல் மதியம் வரை சுடச்சுட உணவுகள் தயாராகியுள்ளன.

காலை உணவில் இட்லி, பொங்கல், வடை, கேசரி என பாரம்பரிய மெனு இடம் பெற்றது. மதிய உணவில் சைவத்திற்கு வெஜ் பிரியாணி, வத்தல் குழம்பு, ரசம், பாயாசம் என முழுமையான விருந்து. அசைவத்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சரம் மீன் வறுவல், முட்டை மசாலா என பட்டியல் நீள்ந்தது. அரசியல் முடிவுகளுக்கேற்ப, விருந்தும் வைரலானது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!