பதைபதைப்பில் அதிமுக... இன்று குட்கா முறைகேடு வழக்கு விசாரணை... விஜயபாஸ்கர் உட்பட 26 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்!

 
லிஸ்ட்லேயே இல்லையே என்று செங்கோட்டையனின் திடீர் பேச்சு குறித்து எடப்பாடியாரின் தலைமை கவலையில் ஆழ்ந்திருக்க அடுத்த அதிர்ச்சியாக அதிமுகவுக்கு சோதனை மேல் சோதனையான காலகட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரம், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என்று கட்சி சிதறி கிடக்கும் நிலையில், இன்று காலை தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைத் தொடர்பாக டெல்லி சிபிஐ காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. 

இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உட்பட 27 பேருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் உயிரிழந்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கு கைவிடபட்டு மீதமுள்ள 26 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு நிலுவையில் இருந்து  வருகிறது.  இந்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் இறுதி அறிக்கையை  (கூடுதல் குற்றபத்திரிகை) காகித வடிவிலும் 492 ஆவணங்கள் கொண்வற்றை பென்-ரைவ் மூலமாகவும் வழங்கபட்டது. 

அன்று விசாரணைக்கு ஆஜரான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ணன், சேஷாத்ரி, வி.ராமநாதன், ஜோசப் தாமஸ், செந்தில் வேலவன், குறிஞ்சி செல்வன், டாக்டர் லட்சுமி நாராயணன், வி.சம்பத், மனோகர், ஆர்.கே.ராஜேந்திரன் 14 பேர்க்கு  கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கபட்டது.

அன்றைய தேதியில் விசாரணைக்கு ஆஜராகாதவர்களை அடுத்த விசாரணைக்குள் ஏதேனும் ஒரு நாளில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிகை நகல் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். இதனையடுத்து அவருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கபட்டது. இது குறித்த வழக்கு இன்று மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?