அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டிக் கொலை... மர்ம கும்பல் வெறிச்செயல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அதிமுக பிரமுகருடன் பணிபுரிந்த ஹரீஷ் (32) மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டிருந்த ஹரீஷிற்கு, ஒரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக முன்பும் புகார் எழுந்தது. அதைப் போலிசார் விசாரித்தபோதும், இருவரும் மீண்டும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டில் இரவு உணவு எடுத்துக்கொண்ட ஹரீஷ், பின்னர் ஸ்கூட்டரில் சென்றபோது மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து மாருதி நகர் பகுதியில் அவரை வழிமறித்தனர். அரிவாளால் தாக்க முயன்ற கும்பலிடமிருந்து தப்பிக்க அவர் ஓடியும் பயனில்லை; தொடர்ந்து விரட்டிய கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் உடலை கண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர்.
அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஹரீஷின் தனிப்பட்ட உறவு பிரச்சனையா, ரியல் எஸ்டேட் அல்லது வட்டிவியாபார தகராறா — எந்த காரணம் கொலைக்கு பின்னால் உள்ளது என்பது குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!